சீனாவின் தொழில்நுட்பம்... ரஷ்ய தந்திரங்கள்: அமெரிக்காவை அலற விடும் ஈரான்

Donald Trump Iran
By Arbin Jul 25, 2026 03:20 AM GMT
Report

மத்திய கிழக்கில் போர் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலின் துல்லியம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

மிக வலுவாகவே

இதன் பின்னணியில் சீனாவின் செயற்கைக்கோள் பட உதவியும் உக்ரைனில் ரஷ்யா கற்றுக்கொண்ட தந்திரங்களும் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சீனாவின் தொழில்நுட்பம்... ரஷ்ய தந்திரங்கள்: அமெரிக்காவை அலற விடும் ஈரான் | Iran Bombing Of Us Bases

ஜோர்தானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படைத் தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்; இத்தளம் அமெரிக்காவின் சக்திவாய்ந்த 'தாட்' (THAAD) வான் பாதுகாப்பு அமைப்பால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

தாக்குதலுக்குப் பின்னர் ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள், பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தின. ஈரான் தாக்குதலின்போது வான் பாதுகாப்பு அமைப்பு ஏன் செயலிழந்தது என்பது தற்போதும் மர்மமாகவே உள்ளது; இது குறித்து பென்டகன் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் மொத்தமாக அழிக்கப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் ஈரானின் ஏவுகணைத் திறன் தற்போதும் மிக வலுவாகவே உள்ளது என்பது சமீபத்திய தாக்குதல்கள் உறுதி செய்து வருகிறது.

உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல்

உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல்

லண்டனைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில், மேம்பட்ட உளவுத் தகவல், ஏவுகணை வழிகாட்டுதல், இயக்கம் சார்ந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டமிடல் ஆகியவற்றின் கலவையானது ஈரான் முன்னெடுக்கும் தாக்குதல்களில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாண்டு கால தொழில்நுட்ப மேம்பாட்டின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ள அவர்; ஈரானின் ராணுவத் திறன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் முன்பு கூறியிருந்த போதிலும்,

அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடுகளின்படி ஈரான் வசமுள்ள ஏவுகணைகள் ஏறக்குறைய 70 சதவீதம் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது என்றார்.

வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள இலக்குகளை அடையாளம் காண உதவுவதற்கு, சீன செயற்கைக்கோள் படங்களை ஈரான் பயன்படுத்தி வந்துள்ளது.

சீனாவின் தொழில்நுட்பம்... ரஷ்ய தந்திரங்கள்: அமெரிக்காவை அலற விடும் ஈரான் | Iran Bombing Of Us Bases

அத்தகைய படங்களை வழங்கியதற்காக, மே மாதத்தில் அமெரிக்கா மூன்று சீன நிறுவனங்கள் மீது தடைகளை விதித்தது. இருப்பினும், சீனாவின் உளவுத்தகவல்களை ஈரான் பயன்படுத்துவது தொடர்பில் சில நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, குண்டுவெடிப்புகளின் போது வளைகுடா முழுவதும் உள்ள சிஐஏ தளங்கள் மீது ஈரான் நடத்திய தொடர்ச்சியான துல்லியமான தாக்குதல்கள், ரஷ்யா ஈரானுடன் படங்களைப் பகிர்ந்து கொண்டதா என்ற சந்தேகத்தை அமெரிக்க ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியது, ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை.

சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு தாராளமாக உதவி வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப்போவதில்லை என்று ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாகக் கூறி, டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று அவரது கருத்துக்கு முரணான தகவலைத் தெரிவித்தார்.

தடுமாறி வருவதாக

ஈரானின் ஏவுகணைத் திட்டம், சீன மின்னணுவியல் மற்றும் ராக்கெட் எரிபொருளுக்கான அம்மோனியம் பெர்குளோரேட் ஆகியவற்றை பெருமளவில் சார்ந்துள்ளது.

இருப்பினும், தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பலத்த பாதுகாப்பு கொண்ட அமெரிக்க மற்றும் வளைகுடா நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அவ்வப்போது முறியடிக்கும் அளவுக்கு அதிநவீனமானவை எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே ஆயுதங்களின் பற்றாக்குறையால் அமெரிக்கா தடுமாறி வருவதாக தகவல் கசிந்துள்ள நிலையில், ஈரான் தற்போதும் வலுவான நிலையிலேயே உள்ளது என ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

சீனாவின் தொழில்நுட்பம்... ரஷ்ய தந்திரங்கள்: அமெரிக்காவை அலற விடும் ஈரான் | Iran Bombing Of Us Bases

மட்டுமின்றி, ஈரானும் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் தந்திரோபாய ரீதியாக முன்னேறியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியதைப் போன்ற முறைகளை அது பயன்படுத்துகிறது; அங்கு பெரிய தாக்குதல்களை விட சிறிய தாக்குதல்கள் அதிக பலனளிக்கக்கூடும்,

மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தைத் திசைதிருப்பி, பாலிஸ்டிக் தாக்குதலுக்கு வழிவகுக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒருவித மேற்கத்திய எதிர்ப்புப் புரிதல் இருந்தாலும், கிளர்ச்சியின் அச்சு என்று அடையாளப்படுத்தும் வகையில் ஒரு நிலையான இராணுவக் கூட்டணியாக இந்த நாடுகள் உருவாகவில்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், இந்த நாடுகள் தங்களுக்குள் தீவிரமான உறவையும் பலப்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US