பஹ்ரைனில் அமேசான் டேட்டா சென்டரை குறிவைத்து ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards), பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசானுக்கு சொந்தமான டேட்டா சென்டரை குறிவைத்து தாக்கியதாக அறிவித்துள்ளது.
ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அமெரிக்க இராணுவத்திற்கான தகவல் சேகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் டேட்டா சென்டர் கட்டிடம் அழிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுவரை அமேசான் அல்லது பஹ்ரைன் அதிகாரிகள் எந்தவிதமான கருத்தும் வெளியிடவில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் எந்த வசதியும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கச் சரியான இலக்காக இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த புதன்கிழமையும் அதே டேட்டா சென்டரை குறிவைத்து தாக்கியதாக IRGC தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா, சமீபத்தில் ஈரானின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பல்வேறு இடங்களில் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள், இந்த நிலைமை காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி நிறுவனங்கள், சைபர் மற்றும் உடல் தாக்குதல்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |