F-16 ரக போர் விமானத்தை தாக்கிய ஈரான்: திட்டவட்டமாக மறுத்த அமெரிக்கா
Iran claims to struck us f-16 Fighter jet: அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
F-16 ரக போர் விமானம் மீது தாக்குதல்
மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலானது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா ராணுவத்திற்கு சொந்தமான F-16 ரக போர் விமானத்தை ஈரானின் புரட்சிகர காவல் படையினர் தாக்கியதாகவும், அதன் காரணமாக போர் விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரஸ் டிவி வெளியிட்ட தகவலில், பாரசீக வளைகுடாவிர்கு மேல் பறந்த அமெரிக்காவின் F-16 ரக போர் விமானம் ஒன்றை ஈரான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது ஏவுகணையானது போர் விமானத்தின் மிக அருகில் வெடித்ததில் விமானம் சேதமடைந்ததாகவும், அதனால் விமானி அருகிலுள்ள விமான தளத்தில் அவசர தரையிறக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா திட்டவட்டமாக மறுப்பு
இந்நிலையில் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான கூற்று பொய்யானது என அமெரிக்க ராணுவ தலைமையகம் நிராகரித்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் இயங்கி வரும் அனைத்து அமெரிக்க போர் விமானங்களின் எண்ணிக்கையும் சரியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.