ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்: அமெரிக்கா மீது பகீர் குற்றச்சாட்டு
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பது மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திறக்கப்பட்ட ஹார்முஸ்
இஸ்ரேல்-லெபனான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து, பேச்சுவார்த்தை ஒப்பந்தங்களுக்கு இணங்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தி திறந்து விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் ஜலசந்தி திறக்கப்பட்டுவிட்டது, கப்பல்கள் போக்குவரத்திற்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. “நன்றி” என தெரிவித்து இருந்தார்.

மீண்டும் ஈரான் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்
இந்நிலையில் உலகளாவிய மிக முக்கியமான கடல் வழி பாதையான ஹார்முஸ் மீண்டும் ஈரானின் முழு கட்டுப்பாட்டிற்கு கீழ் அதாவது மிகுந்த பாதுகாப்பு கெடுபிடிகளுடன் பழைய நிலைக்கு வந்து இருப்பதாக ஈரான் ராணுவம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிடப்பட்ட அடுத்த நாளே இந்த தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு இருப்பது சர்வதேச அளவில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கு, அமெரிக்கா ஈரானிய கப்பல்களை தொடர்ந்து இடைமறித்து வருவதே முதன்மையான காரனம் என்று ஈரானிய ஆயுதப்படை தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tasnim செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும்.
ஈரானை நோக்கியும், ஈரானில் இருந்து வெளியே செல்லும் கப்பல்களுக்கு தடையற்ற போக்குவரத்தை அமெரிக்கா உறுதி செய்யும் வரை ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |