அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்
Iran Communicated 7 Conditions for U.S: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்
அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக கத்தாரின் ராஜதந்திர வழிகள் மூலமாக ஈரான் தங்களது முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது என ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயின் தெரிவித்துள்ளார்.

ஈரான் அனுப்பிய நிபந்தனைகளை அமெரிக்கா தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ரெசாய் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தற்போது எதிர்கொண்டு வரும் மூலோபாய சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளையும், ஈரானின் இறையாண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பார்வை
ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததை அடுத்து இந்த முன்னேற்றமானது நடந்துள்ளது.

அதில், நீண்ட கால போரை முடிவுக்கு கொண்டு வர ராஜந்திர வழிகளை பின்பற்றுவதா அல்லது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை பின்பற்றுவதா என்று இறுதி முடிவு செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.