ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு

United States of America Iran Ayatollah Ali Khamenei Israel-Iran conflict
By Thiru Mar 01, 2026 03:14 AM GMT
Report

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் மீது நேற்று ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர்.

இதில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தனர்.

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு | Iran Confirms Supreme Leader Ali Khamenei Death

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் ஈரான் வெளியிடாத நிலையில், உச்ச தலைவர் அலி காமெனி உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது தொடர்பான ஊகங்கள் பல மணி நேரங்களாக நீடித்து வந்தது.

இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல்: காணாமல் போன 173 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல்: காணாமல் போன 173 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

உறுதிப்படுத்திய ஈரான் அரசு ஊடகம்

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரானின் அரசு ஊடகமான IRIB ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் உச்ச தலைவர் அவருடைய அலுவலகத்தில் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு இருந்த போது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு | Iran Confirms Supreme Leader Ali Khamenei Death

அத்துடன் இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்களான அவரது மகள், மருமகன், பேத்தி என அனைவரும் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அலி காமெனி மறைவை ஒட்டி ஈரான் நாடு முழுவதும் 40 நாட்கள் தேசிய துக்க தினத்தை ஈரான் அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US