ஈரான் உச்ச நீதிமன்ற தாக்குதல்: இரண்டு நீதிபதிகள் சுட்டுக் கொலை
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மூத்த நீதிபதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை, ஒரு மர்ம நபர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதிகள் அலி ரசினி(Ali Razini)மற்றும் முகமது மொகிசே(Mohammad Moghiseh) ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த தாக்குதலில் ஒரு மெய்க்காப்பாளர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்லும் முயற்சியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்
கொல்லப்பட்ட இரு நீதிபதிகளும் 1980கள் மற்றும் 1990களில் இஸ்லாமிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, நீதிபதி ரசினி 1998இல் நடந்த கொலை முயற்சியில் இருந்து தப்பியிருந்தார். மற்றொரு நீதிபதி மொகிசே மீது 2019இல் அமெரிக்கா மற்றும் 2023இல் கனடா ஆகிய நாடுகள் தடை விதித்திருந்தன.
இவர்கள் இருவரும் "மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக" குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
தாக்குதலின் நோக்கம்
தாக்குதலின் உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் அல்லது அரசியல் எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரானிய அதிகாரிகள் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |