போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை: டிரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி
போர் நிறுத்த தொடர்பான அமெரிக்காவின் கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த ஈரான்
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் அமைதி உடன்படிக்கை குறித்தோ, போர் நிறுத்தம் குறித்தோ எந்தவொரு கோரிக்கையையும் ஈரான் முன் வைக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி முழுமையாக மறுத்துள்ளார்.

டிரம்ப் - அப்பாஸ் கருத்துகளுக்கு இடையிலான முரண்பாடு
சமீபத்தில் NBC செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் தங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ், டிரம்பின் கருத்து முற்றிலும் கற்பனையானது, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவும் இல்லை, போர் நிறுத்தம் கேட்கவும் இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
மேலும், வெற்றி பெற வாய்ப்பே இல்லாத சட்டவிரோத போரில் ஈடுபட்டு வருகிறோம் என்று டிரம்ப் உணரும் வரை ஈரான் தங்களை தொடர்ந்து தற்காத்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |