ஹார்மோஸ் நீரிணை வழியே இந்தியாவிற்கு வந்த கப்பல் - மறுக்கும் ஈரான்
ஹார்மோஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு அனுமதிக்க அளிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்டுகிறது.
ஹார்மோஸ் நீரிணை வழியே இந்தியாவிற்கு வந்த கப்பல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெட்ரோல், LPG தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நாடுகள் இணைய வகுப்பு, ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி புரிவது போன்ற நடவடிக்கைகளை அறிவித்தன.
இந்தியாவில், LPG தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அச்சத்தில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ஈரான் அரசிடம் பேசியதையடுத்து இந்தியாவிற்கு செல்லும் கப்பல்கள் ஹார்மோஸ் நீரிணை வழியாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மார்ச் 1 ஆம் திகதி, கச்சா எண்ணெய்யை ஏற்றி சவுதி அரேபியாவின் துறைமுகமான ராஸ் தனுராவிலிருந்து லைபீரியாவின் கொடியுடன் கூடிய ஷென்லாங் சூயஸ்மாக்ஸ் (Shenlong Suezmax) கப்பல் 2 நாட்களுக்கு பிறகு புறப்பட்டு நேற்று மாலை மும்பைக்கு வந்தடைந்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதியே அது கடைசி சமிக்ஞை வெளிப்படுத்தியதாவும், அதன் பின்னர் ஆபத்தான பகுதியில் பயணிக்கும்போது கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக அதன் டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் AIS அல்லது தானியங்கி அடையாள அமைப்பை அணைத்துவிட்டு பயணித்ததாகவும் கூறப்படுகிறது.
ஈரான் மறுப்பு போர்
தொடங்கியதில் இருந்து இந்தியக் கொடியுடன் கூடிய 28 கப்பல்கள் இன்னும் நீர்வழியில் அல்லது அதற்கு அருகில் உள்ளன என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய கப்பல்களுக்கு அனுமதிக்க அளிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |