ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவின் இருப்பை முற்றிலுமாக ஒழிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை எனக் கூறியுள்ளார்.
Saeed Khatibzadeh
இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா காமெனி தலைவராக தெரிவு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரானை எதிர்காலத்தில் வழிநடத்தப்போகும் நபரைத் தெரிவு செய்யும் செயல்பாட்டில் நாங்கள் ஈடுபட விரும்புகிறோம் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்தியாவின் டெல்லியில் நடந்து வரும் Raisina உரையாடல் நிகழ்ச்சியில் ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் Saeed Khatibzadeh கலந்துகொண்டார்.
கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளிடம் உரையாற்றிய அவர், நீர்வழிப்பாதையைத் தடுக்கும் உடனடி நோக்கம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். "நாங்கள் இன்னும் ஹார்முஸ் நீர்முனையை மூடவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அதை செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஈரான் அதன் இருப்பு மற்றும் பிராந்தியத்தில் செயலில் பங்கு வகிப்பதில், கடல்சார் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறினார்.

உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
ட்ரம்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர், "அமெரிக்க ஜனாதிபதி (ட்ரம்ப்) உள்நாட்டில் உள்ளூர் அரசியல் நியமனங்களை கட்டுப்படுத்த முடியாதபோது, ஈரானின் தலைமையை வடிவமைப்பது பற்றி பேசுவது முரண்பாடாக இருக்கிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானில் தலைமை மாற்றத்தைக் கேட்கிறார்; அதே நேரத்தில் நியூயார்க்கின் மேயரைக் கூட அவரால் நியமிக்க முடியாது. இந்த காலனித்துவ அணுகுமுறையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
அவர் உள்நாட்டில் ஜனநாயகத்தைக் காண விரும்பினாலும், ஈரானின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை கவிழ்க்க விரும்புகிறார்" என்றார்.
அத்துடன் எந்தவொரு தாக்குதல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |