ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி

Saudi Arabia Israel-Iran conflict
By Arbin Mar 29, 2026 10:21 AM GMT
Report

அமெரிக்க வீரர்கள் பலர் படுகாயங்களுடன் தப்பிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் நொறுங்கியுள்ள அதிர வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

முக்கியமான கண்களில்

சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள், விமானங்கள் சிதைந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.

ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி | Iran Destroyed Us Air Force Planes

அந்த விமானங்களில் ஒன்று E-3G எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் வான் கண்காணிப்பில் மிக முக்கியமான கண்களில் ஒன்றாகத் திகழும் இந்த விமானம், வெள்ளிக்கிழமையன்று குறைந்தது ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் நடத்திய தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் 15 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

அமெரிக்காவை குலுங்க வைத்த... ட்ரம்பிற்கு எதிரான No Kings ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவை குலுங்க வைத்த... ட்ரம்பிற்கு எதிரான No Kings ஆர்ப்பாட்டங்கள்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் அந்த விமானம் இரண்டாகப் பிளந்துள்ளது. அமெரிக்க விமானப்படையின் மிக முக்கியமான இந்த E-3 விமானமானது மிகவும் குறைந்த என்ணிக்கையிலேயே செயற்பாட்டில் உள்ளது.

தற்போது சவுதி அரேபியாவில் ஈரான் தாக்குதலுக்கு ஒரு விமானம் இலக்காகியுள்ளது. வெள்ளிக்கிழமை ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் 29 ட்ரோன்களையும் சுல்தான் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவியுள்ளது.

ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி | Iran Destroyed Us Air Force Planes

ரியாத்திலிருந்து சுமார் 60 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த விமானத் தளம், ராயல் சவுதி விமானப்படையால் இயக்கப்பட்டு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இராணுவக் குவிப்பு

ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டும் வருகிறது. ஈரான் தாக்குதலில் இதுவரை காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 300 கடந்துள்ளதாக கூறப்பட்டாலும், உண்மையான இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

தற்போது இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் போர், ஏற்கனவே பல அமெரிக்க உயிர்களைப் பலிகொண்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவக் குவிப்பு என்று அதிகாரிகள் குறிப்பிடும் வகையில், அமெரிக்கா அப்பிராந்தியத்திற்குத் தனது படைகளைத் திரளாக அனுப்பியுள்ளது.

ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி | Iran Destroyed Us Air Force Planes

ஆனால், இது அமெரிக்காவிற்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில், பல போர்க்கப்பல்கள் மற்றும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களின் துணையுடன், சுமார் 50,000 அமெரிக்க வீரர்கள் தற்போது இப்பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஆனால், ஒரு மில்லியன் வீரர்களுடன் இப்படியான ஒரு தருணத்திற்கு ஈரான் தயார் நிலையில் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US