போர் சூழலில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பை கண்டறிந்துள்ள ஈரான்
Iran discovers 7.5 trillion cubic feet gas reserve: ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில், ஈரானின் எரிவாயு ஆலைகள் தாக்கப்பட்டு கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.
மேலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சூழலில் ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஃபார்ஸ் மாகாணத்தின் தென்பகுதியில் 7.5 ட்ரில்லியன் கன அடி புதிய எரிவாயு இருப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவில் சுமார் 5.7 டிரில்லியன் கன அடி மீட்கக்கூடிய அளவில் உள்ளது.

மீட்கக்கூடிய இந்த இருப்பு, ஈரான் கத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான சவுத் பார்ஸின் ஒரு கட்டத்திலிருந்து கிடைக்கும் சுமார் 15 ஆண்டுகால உற்பத்திக்குச் சமமானதாக இருக்கும்." என தெரிவித்துள்ளார்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எரிவாயுவை “இனிப்பு எரிவாயு” என்று வர்ணித்த பக்னேஜாத், இது மேம்பாட்டு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இரண்டையும் குறைக்கும் என தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசு ஊடகங்கள் இந்த வளங்களின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்களாக இருக்கும் என மதிப்பிடுகின்றன.
கடந்த ஆண்டு, பஸான் வயலில் சுமார் 10 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |