விரக்தியின் அறிகுறி... அமெரிக்காவின் புதிய தடை அச்சுறுத்தலைப் புறந்தள்ளிய ஈரான்
Iran dismisses threat of new US sanctions: புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.
மிகக் கடுமையான
எதிர்பார்க்கப்படும் புதிய நடவடிக்கைகள் ஈரானைத் தோற்கடிக்கத் தவறிவிடும் என்றும் அவர் பதிலளித்துள்ளார். திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ள அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளது; பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, அந்நாட்டின் உள்கட்டமைப்பு பலமுறை தாக்கப்பட்டுள்ளதுடன், வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், கிட்டத்தட்ட ஆறு மாத காலப் போருக்குப் பிறகும் ஈரான் தனது நிலையில் உறுதியாக உள்ளது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு இன்றியமையாததான ஹார்முஸ் நீரிணையில், அங்கீகரிக்கப்படாத எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது கிட்டத்தட்ட முடக்கியுள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. பதிலுக்கு அமெரிக்க இராணுவமும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில் கடற்படை முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அவர்கள் (அமெரிக்கத் தலைவர்கள்) இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகிச் சென்ற நிலையில்... மீண்டும் அதே பழைய திட்டங்களைக் கையில் எடுப்பது, அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரக்தியில் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண, அமெரிக்கா ஈரானிடம் மரியாதையுடன் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈரானியர்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை.
முற்றுகைகள் அல்லது பிற இராணுவ நடவடிக்கைகள் என அவர்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டன; அவர்களின் இந்தப்புதிய முயற்சியும் தோல்வியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தயாராக இல்லை
இதனிடையே, ஈரானுக்கு எந்த விதமான அவசர உதவியை வழங்கும் நாட்டிற்கும் எதிராகப் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து அனுப்பப்படும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வாங்கும் சீனா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், முறையான பேச்சுவார்த்தைகளில் தீர்வு காண வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, ஈரான் தரப்பில் மீண்டும் ஒப்பந்தத்திற்கு கெஞ்சுவதாக குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஆனால், சரியான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது என் கருத்து என்றும் ஈரானைப் பற்றி அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், புதிய பிராந்தியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து அண்டை நாடுகளிடமிருந்து பல அழைப்புகளைத் தாங்கள் பெற்றுள்ளதாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

ஆனால் எந்தெந்த நாடுகள் அவை என்பதை காலிபாஃப் தெரிவிக்கவில்லை. இஸ்ரேலுக்காக இப்பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா ஆபத்துக்குள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டியதுடன், சுதந்திரமான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிராந்திய ஒழுங்கமைப்பே அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டும் என்றும் கூறினார்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவது போன்ற, போரின் தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்ணயித்த இலக்குகளை அவரால் இன்னும் அடைய முடியவில்லை.
மட்டுமின்றி, போரைக் கைவிட்டு வெளியேறவும் ட்ரம்பால் முடியவில்லை. ஈரான் பிடிவாதமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தூதரக ரீதியிலான தீர்வுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |