பஹ்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்
அமேரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) பஹ்ரைனின் முக்கிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்துள்ளது.
தலைநகர் மனாமாவின் தெற்கே சிட்ரா தீவில் அமைந்துள்ள பாப்கோ (Bapco Energies) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது.
தாக்குதலுக்குப் பிறகு அடர்ந்த புகை மேகங்கள் வானில் எழுந்தன. அருகில் உள்ள பகுதிகளும் சேதமடைந்தன. பலர் காயடைந்துள்ளனர்.

பஹ்ரைன் அரசு, ஈரான் ஏவுகணை தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகாரபூர்வமான அறிக்கையில், "தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" எனவும், பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bapco சுத்திகரிப்பு நிலையம், பஹ்ரைனின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி 2.67 லட்சம் பீப்பாய் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
மேலும், 1.4 கோடி பீப்பாய் எண்ணெய் சேமிப்பு வசதிகளும், கடல் வழி விநியோக நிலையங்களும் உள்ளன.
இதற்கு முன்னதாக, ஞாயிறுக்கிழமை, பஹ்ரைனின் குடிநீர் உற்பத்தி நிலையம் ஈரான் தாக்குதலால் சேதமடைந்தது. 3 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ஈரானுக்கு பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் கண்டனம் தெறிவித்துள்ளது.
The Bapco oil refinery, a vital element of Bahrain's oil infrastructure, incurred damage and a subsequent fire following a missile attack attributed to Iranian sources. pic.twitter.com/whlE3tJzkE
— OSINT Europe (@Osinteurope) March 9, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran Bahrain drone strike, Bapco oil refinery attack, Middle East conflict 2026, Bahrain oil facility fire, Iran Israel US tensions, Gulf oil infrastructure strike #Iran #Bahrain #DroneStrike #OilRefinery #MiddleEastConflict #Bapco #GlobalEnergy #BreakingNews