வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து “காமிகாஸி ட்ரோன்” தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள Camp Udairi ஆயுதக் களஞ்சியம், Ali Al Salem விமான தளத்தில் உள்ள Patriot ரேடார் மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், அமெரிக்க இராணுவ தளங்களை கொண்டுள்ளதால், ஈரானின் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
குவைத் அரசு, மின்சாரம் நிலையம் மற்றும் குடிநீர் உற்பத்தி நிலையம், மேலும் ஒரு எண்ணெய் நிலையம் தாக்குதலுக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்க அமெரிக்கா, ஈரானை “தண்டிக்க” விமானத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில், அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
US Central Command வெளியிட்ட தகவலின்படி, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) இருந்தபோதும், மீண்டும் வன்முறை வெடித்திருப்பதை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் தற்போது உயர் எச்சரிக்கையில் உள்ளன. ஈரானின் தாக்குதல்கள், பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |