அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள்
ஈரானை நோக்கி அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பி வரும் நிலையில், ஈரானின் ட்ரோன்கள் அதன் அருகே சென்று படம் பிடித்துள்ளது.
அமெரிக்க கப்பல்களை நெருங்கிய ஈரானின் ட்ரோன்கள்
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 6000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்னும் விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்ட மாபெரும் கப்பற்படையை மத்திய கிழக்கை நோக்கி அனுப்பியுள்ளார்.

ஈரானின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மற்றும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படும் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அதன் ஆதரவு அமைப்புகளான ஹிஸ்புல்லா உள்ளிட்டவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதனால் உலகில் பெரும் போர் பதற்றம் எழுந்துள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே மோதல் வெடித்தால், அது மத்திய கிழக்கு முழுவதும் பரவி, உலகளாவிய எண்ணெய் சந்தையை பாதிக்கும்.
JUST IN🇮🇷🇮🇱🔥 Iranian #IRGC just released an intricate and Strikingly close drones footage of USS Abraham Lincoln (CVN-72) near the Persian Gulf in the preparation of retaliatory actions.#Iran, #Israel, #US
— Dr. Gevorg Melikyan (@GeorgeMelikyan) January 25, 2026
Source: https://t.co/RlSoJeFQIK (Quantum GeoPolitiX) pic.twitter.com/tN3k7AFfep
தற்போது ஈரானின் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள்(IRGC) யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலை ஈரானின் ட்ரோன்கள் அருகே சென்று படம் பிடித்த வீடியோவை வெளியிட்டு எச்சரித்துள்ளது.
ஈரானின் இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் மீது அமெரிக்க படைகள் போர் தொடுத்த போது, அமெரிக்கா அதில் எவ்வாறு வெற்றி பெற்றது? அமெரிக்கா பயன்படுத்திய புதிய உத்திகள் என்ன? அதே போல், ஈரான் அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ளும் ராணுவ வலிமையை கொண்டுள்ளதா? என இன்றைய உண்மையின் தரிசனம் நிகழவில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |