ஈரான் அணு ஆயுதங்களை இனி தயாரிக்காது! டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்காது என ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை
ஈரானுடன் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் மறைமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த முயற்சி இன்னும் முழுமையான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையாக மாறவில்லை என்றாலும், இந்த முதல் கட்ட தொடர்பு மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

ஈரானின் தேசிய நலன்கள் பாதிக்கப்படாமல் அமெரிக்கா முன் மொழியும் எந்தவொரு விவகாரங்களையும் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தை முயற்சியானது போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன் மட்டும் நின்று விடாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தீர்வை நோக்கி முன்னெடுக்கப்படுவதாகவும் ஈரானிய தரப்பு அதிகாரிகளும் தகவல் தெரிவித்து இருந்தனர்.
அணு ஆயுதங்கள் தொடர்பில் முக்கிய முடிவு
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் இனி எப்போது அணு ஆயுதங்களை தயாரிக்காது என்று ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரு தரப்பிற்கும் இடையே நீடித்து வரும் இராணுவ நடவடிக்கையை தணித்து, அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் முழுமையான தகவல்களை வழங்க நான் விரும்பவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்த பேச்சுவார்த்தையை தீவிரமாக முன்னெடுப்பதற்கு ஈரானின் உறுதியே முக்கிய காரணம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |