அமெரிக்காவிற்கு எதிராக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வீடியோவை பகிர்ந்த ஈரான்
Iran Embassy Shares Balakrishna Fight Scenes: அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தூதரகம் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சண்டை காட்சி வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளது.
ஐக்கிய நாட்டு சபையில் ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற 81வது ஐக்கிய நாடுகள் சபையின் பொது மாநாட்டில் அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி டிரம்பும், ஈரான் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முதலில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 40 நிமிடம் உரையாற்றினார்.
அப்போது “நான் பெரிய முடிவு ஒன்றை எடுக்க வேண்டியது உள்ளது. ஈரானை விட மிகப் சிறந்த நாட்டை மத்திய கிழக்கில் உருவாக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் ஒன்றை ஈரானுடன் மேற்கொள்ள வேண்டுமா? அவர்கள் மீண்டும் மக்களை அழிப்பதற்கான வாய்ப்பு வழங்காத வகையில் இஸ்லாமிய குடியரசை முழுவதுமாக அழிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதன் பிறகு பேசிய ஈரான் அதிபர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் உண்மையாக பாதிக்கப்படுபவர்கள் ஈரான் மக்கள் என்று தெரிவித்தார்.
அத்துடன் நாங்கள் ஒருபோதும் மண்டியிட மாட்டோம். ஈரான் எப்போதும் மிரட்டலுக்கு அடிபணியாது என்று பேசினார்.
பாலகிருஷ்ணாவின் வீடியோவை பகிர்ந்த ஈரான் தூதரகம்
Trump talks about annihilating Iran.
— Iran Embassy in Zimbabwe (@IRANinZIMBABWE) September 23, 2026
But he knows Iran is not defenseless.
Since we informed they have recently been watching Bollywood instead of Hollywood. pic.twitter.com/v6Le8zkH5X
இந்நிலையில் ஈரான் பாதுகாப்பற்ற நாடு அல்ல என்பதை கூறி அமெரிக்காவிற்கு பதிலடியாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சண்டை காட்சி ஒன்றை ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் பகிர்ந்துள்ளது.
58 வினாடிகள் கொண்ட அந்த சண்டை காட்சியில், எதிரிகள் பாலகிருஷ்ணாவை நோக்கி துப்பாக்கியால் சுடுவதும், அந்த குண்டுகளை பாலகிருஷ்ணா சாதாரணமாக தடுப்பதும் பதிவாகியுள்ளது.
பின்னார், எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதும், அதனை கண்டு எதிரிகள் அஞ்சி நடுங்குவதும் இடம்பெற்றுள்ளது.