உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான்

Iran Israel-Iran conflict
By Arbin Mar 06, 2026 04:17 PM GMT
Report

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் மிக மோசமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், IRGC தளபதி எஸ்மாயில் கானி குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்காக உளவு

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காக தளபதி கானி ஈரானால் தூக்கிலிடப்பட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளது. அரேபிய ஊடக வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலில்,

உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் | Iran Executed Quds General

உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கானி கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் இதுவரை ஈரானால் உறுதிப்படுத்தவில்லை.

அமீரகத்தில் செயல்படும் பிரபலமான செய்தி நிறுவனம் ஒன்று, தொடர்ச்சியான கொடூரமானத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் கானியின் குறிப்பிடத்தக்க திறனைப் பற்றி இணையத்தில் பரவும் தகவல்களை பட்டியலிட்டுள்ளது.

67 வயதான கானி இஸ்ரேல் நடத்திய பல தாக்குதல்களில் இருந்தும் உயிர் தப்பியுள்ளார். ஆனால், அவருடன் இருந்த பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானை முடித்துவிட்டு... அமெரிக்காவின் அடுத்த இலக்கு அந்த நாடு: ட்ரம்ப் மிரட்டல்

ஈரானை முடித்துவிட்டு... அமெரிக்காவின் அடுத்த இலக்கு அந்த நாடு: ட்ரம்ப் மிரட்டல்

IRGC குத்ஸ் படைகளின் தளபதியான காசிம் சுலைமானி, அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட, 2020 ஜனவரி மாதம் கானி புதிய தளபதியாக பொறுப்புக்கு வந்தார். குத்ஸ் படைகள் மத்திய கிழக்கு முழுவதும் செயல்படுவதுடன், ஈரானுக்காக வெளிநாடுகளில் செயல்படும் ஒரு படையாகும்.

குத்ஸ் படைகளின் தளபதிகளை உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றே கூறப்படுகிறது. ஆனால், குத்ஸ் படைகளின் தலைமை பொறுப்புக்கு கானி வந்ததன் பின்னர், அந்த அமைப்பின் மிக மிக முதன்மையான தலைவர்கள் பலர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானுக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்டவர்களும் அடங்குவர்.

உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் | Iran Executed Quds General

இணையத்தில் உலவும் ஒரு தகவலில், ஹனியே படுகொலைக்கு பின்னணியில், இஸ்ரேலுக்கு தகவல் தெரிவித்தவர் தளபதி கானியாக இருக்கலாம் என்றே குறிப்பிடுகின்றனர்.

ஈரானில் மிக ரகசியமான ஒரு இடத்தில் ஹனியேவை தளபதி கானி சந்தித்ததன் சில மணி நேரத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

பிராந்தியம் முழுவதும் நடந்த தாக்குதல்களில் டசின் கணக்கான மூத்த ஈரானிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். மிக சமீபத்தில், ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி எங்கே தங்கியிருக்கிறார் என உள்ளூர் மக்களுக்கே தெரியாத நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு நடவடிக்கையால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொலைப்பட்டியல்

அலி காமெனியுடன் பல முதன்மையான தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கானி தொடர்பில் தகவல் இல்லை. ஈரானில் முதன்மையான தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களில் அனைத்திலும் கானியும் சம்பந்தப்பட்டுள்ளார்.

உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் | Iran Executed Quds General

அலி காமெனியை சந்தித்துவிட்டு தளபதி கானி வெளியேறிய சில நிமிடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், அலி காமெனியின் சடலம் தொடர்பான காணொளியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதலில் வெளியிட்டதின் பின்னணியிலும் கானி செயல்பட்டிருக்கலாம் என்றே கூறுகின்றனர்.

ஈரான் தொடர்பில் இஸ்ரேல் வெளியிட்டுள்ள ஒரு கொலைப்பட்டியலில் கானியின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த இரண்டு வருடங்களில், கானி பங்கேற்றுள்ள பல ரகசிய கூட்டங்கள் அல்லது, சந்திப்புகள் அனைத்தும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்கானதாக The National பட்டியலிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேல் முன்னெடுத்த 12 நாட்கள் நீண்ட போரிலும் கானி கொல்லப்பட்டதாக பல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன. ஆனால் மீண்டும் அவர் ஒரு பொது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் | Iran Executed Quds General

2024 அக்டோபர் மாதத்திலும் கானி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ஈரானிய செய்தி ஊடகத்தில் அவர் மீண்டும் தென்பட்டார். ஹிஸ்புல்லா தலைவர்கள் குழுவில் இஸ்ரேல் உளவாளி ஊடுருவியதாக எழுந்த சந்தேகத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து,

ஈரானும் அப்படியான ஒரு விசாரணையை முன்னெடுக்க, அதில் கானியும் அவருக்கு நெருக்கமான ஒரு குழுவும் சிக்கியதாக தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில், IRGC ஆல் தளபதி கானிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US