இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக 2 பேரை தூக்கிலிட்ட ஈரான்
ஈரான் அரசு, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானியர்களை தூக்கிலிட்டுள்ளது.
ஓமித் பெஹ்சாத் (Omid Behzad) மற்றும் பூரியா சஃப்வத் (Pouria Safvat) என்ற இருவரும், கடந்த ஆண்டு நடந்த குறுகிய போர் மற்றும் சமீபத்திய மோதலின் போது, இஸ்ரேலுக்கு இராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்களின் இடம், புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். தற்போது அவர்கள் இருவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஈரானில் தேசிய பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தணடனை விதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
Human Rights Watch அமைப்பு, கடந்த நான்கு மாதங்களில் ஈரான் குறைந்தது 50 பேரை தூக்கிலிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதில் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் அடங்குவர்.
ஈரான், ஜனவரியில் நடந்த பெரும் மக்கள் போராட்டங்களை கடுமையாக அடக்கியது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பாக தாக்குதல்களை மேற்கொண்டன.
ஈரான்-இஸ்ரேல் மோதல், ஜூன் மாதத்தில் நடந்த 12 நாள் போருக்கு பின்னர், பிப்ரவரி மாதம் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்தது. அமெரிக்கா மேற்கொண்ட சமாதான ஒப்பந்தம் தற்காலிக அமைதியை ஏற்படுத்தியிருந்தாலும், நிலைமை மீண்டும் பதற்றமாகியுள்ளது.
ஈரான் வெளிநாட்டு அமைச்சகம், தற்போது “அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளது. அதே சமயம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “பெரும் தாக்குதல் நடத்த தயாராக இருந்தோம்” என்று கூறியுள்ளார்.
இந்த தூக்குத் தண்டனை, ஈரானின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |