டிரம்ப் விரைவில் அமைதி ஒப்பந்தத்தை அறிவிக்கலாம்: எதிர்பார்த்து இருக்கும் ஈரான்
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக அறிவிப்பார் என ஈரான் அதிகாரிகள் எதிர்பார்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம்
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக அறிவிப்பார் என்று ஈரான் அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த நேரத்திலும் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக டிரம்ப் அறிவிக்கலாம் என்று ஈரான் நினைப்பதாக அந்நாட்டின் பார்ஸ்(Fars) செய்தி நிறுவனம் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய சிக்கல்கள் தீர்க்கப்படும் முன்னரே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக அறிவித்து, அமெரிக்க பொதுமக்களிடம் ஆதரவை பெற டிரம்ப் முயன்று வருவதாகவும் ஈரான் கருதி வருகிறது.

ஆனால் ஈரான் தன்னுடைய முக்கிய சில நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதாக ஈரானிய பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த நபர் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை எந்தவொரு ஒப்பந்தம் எட்டப்படாது என்றும் ஈரானிய தரப்பு விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |