புடினை சந்திக்க ரஷ்யா சென்றுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க வந்துள்ளார்.
அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தைகள் தடைப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அராக்சி, கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு பயணம் செய்து முக்கிய மத்தியஸ்த நாடுகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தானில், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கடற்பாதை குறித்து ஓமன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது தூதர்கள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததை நியாயப்படுத்தி, “ஈரான் அதிகாரிகள் பேச விரும்பினால் அழைக்கலாம்” என்று கூறினார். அவர், போர் விரைவில் முடிவடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே தாக்குதல்கள் அதிகரித்து, அமெரிக்கா நடத்திய இடைக்கால சமாதான ஒப்பந்தம் சீர்குலைந்துள்ளது.
ரஷ்யா, ஈரானின் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு இரு நாடுகளும் 20 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்நிலையில், இந்த சந்திப்பு, ஈரான்-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தடுமாறும் சூழலில், ஈரானின் தூதரக முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |