கிரெம்ளின் மாளிகையில் புடினை சந்தித்த ஈரான் அமைச்சர்: அணு ஆயுதப் பிரச்சனை குறித்து பேசியதென்ன?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஈரான் வெளியுறவு அமைச்சர் கிரெம்ளின் மாளிகையில் சந்தித்தார்.
அணு ஆயுதப் பேச்சுவார்த்தை
அணு ஆயுத பயன்பாடு குறித்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் நடைபெற உள்ளது.
இந்த வாரத்தின் இறுதியில் அமெரிக்காவுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற அவர், கிரெம்ளின் மாளிகையில் ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
ஒரு நல்ல வாய்ப்பு
இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஈரான் அதிகாரிகள் ஊடகத்திடம் கூறியுள்ளனர்.
அதில், "அணுசக்தி பிரச்சனையைப் பொறுத்தவரை, எங்கள் நண்பர்களான சீனா மற்றும் ரஷ்யாவுடன் நாங்கள் எப்போதும் நெருக்கமான ஆலோசனைகளைக் கொண்டிருந்தோம். இப்போது ரஷ்ய அதிகாரிகளுடன் அவ்வாறு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு" என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |