நாடு நிலையாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை... அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போர் அறிவித்த ஈரான்
அணுசக்தித் திறன்களை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தீவிரமடையக்கூடும்
ஈரான் ஏற்கனவே மேற்கத்திய நாடுகளுடன் போரில் ஈடுபட்டுள்ளது என்று நம்புவதாக ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரகடனம் செய்துள்ளார்.

ஈரான் நிலையாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றும் பெசெஷ்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட, 1980 முதல் 1988 வரையில் நீடித்த ஈராக் போர் குறித்து அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேற்கத்திய நாடுகளுடனான மோதல் இன்னும் மிக மோசமான முறையில் தீவிரமடையக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் போர் ஈராக் நமக்கு எதிராகத் தொடங்கிய போரை விட மோசமானதாக மாறக் கூடும்.
கூர்ந்து கவனித்தால், இது மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது என்றார். ஈராக் போரின் போது, அவர்கள் வீசும் ஏவுகணை எந்தப் பகுதியைக் குறிவைக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் தற்போது, எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஈரான் சூழப்பட்டுள்ளது என்றார்.
ஈரான் விவகாரம் தொடர்பில் விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவிருக்கும் நிலையிலேயே, ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் போர் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

வலிமையான நிலை
இதனிடையே, அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான ஈரானின் தொடர்ச்சியான முயற்சிகள் தொடர்பான பிரச்சினை காரணமாக, சமீப வாரங்களில் அந்த நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபையால் புதிய தடைகள் விதிக்கப்பட்டன.

ஈரானின் அணுசக்தி இலக்குகளால் ஏற்பட்ட அச்சுறுத்தலின் காரணமாக, டொனால்ட் ட்ரம்ப் ஜூன் மாதம் ஈரானியத் தளங்கள் மீது மிக மோசமான தாக்குதல்களை முன்னெடுத்தார்.
ஆனால், அப்போது ஏற்பட்ட சேதங்களை மிக சாதாரணம் என குறிப்பிட்டுள்ள பெசெஷ்கியன், ஈரானின் இராணுவம், மோதலுக்கு முந்தைய நிலையை விட வலிமையான நிலைக்கு மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அவர்கள் தற்போது தாக்குதல் நடத்த விரும்பினால், இயல்பாகவே அவர்கள் மிகவும் உறுதியான ஒரு பதிலடியை எதிர்கொள்வார்கள் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |