நடிகைகள் முதல் பெண் தலைவர்கள் வரை…ஒற்றை நாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடியை வெட்டி போராட்டம்
ஈரானின் கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக போராடிய மஹ்சா மோகோய்(18) சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அபிர் அல்-சஹ்லானி தலைமுடிகளை வெட்டி போராட்டம்.
ஈரான் அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஈரானில் பெண்கள் தலைமறைப்புகளை (ஹிஜாப்) அணிவது கட்டாயமாக்கப்படுவதாக ஈரானின் பழமைவாத அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் போராட்டம் வெடித்தது.
செப்டம்பர் 13 அன்று தெஹ்ரானில் மஹ்சா அமினி (22) என்ற பெண்ணை ஹிஜாப் அணிந்ததற்காக அறநெறிப் பொலிஸார் கைது செய்து சித்ரவதை செய்துள்ளனர்.
नोएडा: सेक्टर 15 में रहने वाली डॉक्टर अनुपमा भारद्वाज में ईरान में चल रहे हिजाब प्रकरण के फेवर में काटे अपने बाल
— News24 (@news24tvchannel) October 8, 2022
सोशल मीडिया पर वीडियो हुआ वायरल#Iran #HijabControversy pic.twitter.com/gMmVnpIlpx
ஈரானிய ஊடகங்கள் மஹ்சா அமினி கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், செப்டம்பர் 16ம் திகதி மூளைச் சாவு அடைந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஹிஜாப்-க்கு எதிரான ஈரானிய மக்களின் போராட்டம் பல மடங்கு அதிகரித்தது, இதில் பொது வெளியில் அடிப்படை தனிமனித சுதந்திரம் கோரியதற்காக ஈரானின் இஸ்லாமிய ஆட்சியால் இரக்கமின்றி 41 பேர் வரை கொல்லப்பட்டனர்.
அத்துடன் மஹ்சா மோகோய் என்ற 18 வயது பெண்ணும் அடக்குமுறை ஆட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் தலை முடியை வெட்டி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் திரைப்பட நடிகைகளான ஜூலியட் பினோச் மற்றும் மரியன் கோட்டிலார்ட் ஆகியோரும் தங்கள் தலை முடிகளை வெட்டி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு; கோஹினூர் சர்ச்சை வைரம் காரணமாக…ராணியின் கிரீடத்தை பெறுவதில் கமீலாவுக்கு சிக்கல்!
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஸ்வீடன் உறுப்பினரான அபிர் அல்-சஹ்லானியும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உரையின் போது அவரது நாடாளுமன்றத்தை வெட்டினார்.