ட்ரம்ப் தனது கல்லறையில் இருந்து தான் கனவு காண வேண்டும்: அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
Iran hit back trump attacks warning: அமெரிக்க கடற்படை பாரசீக வளைகுடாவில் நுழைவது என்பதை டிரம்ப் கல்லறையில் இருந்து கனவு தான் காண வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது.
டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து இருந்தார்.
அமெரிக்க குடியரசுக் கட்சி கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும், இல்லையென்றால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை போன்ற மற்றொரு ராணுவ நடவடிக்கையை ஈரான் எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்து இருந்தார்.

டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு தற்போது ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
ஈரான் கொடுத்த பதிலடி
டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரானின் ஆயுத ப்படை தளபதி அலி அப்துல்லாஹி, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் அனுமதி அளிக்கப்படாது எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடாவுக்குள் நுழைவது குறித்து டிரம்ப் தனது கல்லறையில் இருந்து தான் கனவு காண வேண்டும் எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், கடலடி தொழில்நுட்பம் முதல் ராணுவத் தளவாடங்கள் வரையிலான துறைகளில் அமெரிக்கா எதிர்பார்க்காத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மற்றொரு ஈரானிய அதிகாரியும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா நெருப்புடன் விளையாட கூடாது என்ற ஈரானின் பகிரங்க எச்சரிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.