ஈரானில் ரத்த மழையா? சிவப்பு நிறமாக மாறிய கடல் - என்ன காரணம்?
ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை பெய்த உடன் கடல் ரத்த நிறத்திற்கு மாறியுள்ளது.
ஈரானில் ரத்த மழை?
மத்திய கிழக்கு நாடான ஈரான் சில மாதங்களுக்கு முன்பு வரை மழை இல்லாமல், மிகுந்த வறட்சியை எதிர்கொண்டது. இந்த வறட்சியை சமாளிக்க செயற்கை மழையை பெய்விக்க அதிகாரிகள் திட்டமிட்டு வந்தனர்.

அங்கு பெர்சிய வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் தீவில் (Hormuz Island) மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் பாறைகள் உள்ளதால், இது வானவில் தீவு என அழைக்கப்படுகிறது.
இந்த தீவில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, அந்த தீவில் உள்ள கடற்கரையில் இருந்து கடலின் உள்ளே சென்ற நீர் ரத்த நிறத்திற்கு மாறி, ரத்த கடலாக காட்சியளித்தது.
❗️🩸🇮🇷 - Recent heavy rains have transformed the coastline of Hormuz Island in southern Iran into a dramatic, blood-red spectacle.
— 🔥🗞The Informant (@theinformant_x) December 17, 2025
Runoff from the island's mineral-rich hills carried iron oxide particles into the shallow waters, staining the sea and beaches a vivid crimson hue.… pic.twitter.com/gynEFNkLqi
இது தொடர்பான வீடியோக்களை பலரும் இணையத்தில் பகிர்ந்தனர். இதை பார்த்த மக்கள் ரத்த மழை பெய்துள்ளதா என ஆச்சரியமடைந்தனர்.
புவியியல் காரணம்
ஆனால் அங்கு பெய்தது ரத்த மழை இல்லை. கடல் அடர் சிவப்பு நிறத்திற்கு மாறியதற்கு ஹோர்முஸ் தீவின் புவியியல் அமைப்பே காரணமாக உள்ளது.
இந்த தீவின் மண் மற்றும் பாறைகளில் 'ஹெமடைட்' (Hematite) எனப்படும் இரும்பு ஆக்சைடு தாது அதிகளவில் உள்ளது.

இது மண் மற்றும் பாறைகளுக்கு சிவப்பு நிறத்தை வழங்கும் கனிமம் ஆகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம் ஆகும்.
இந்த தாது ஈர்ப்பதில் விரைவாக ஆக்சிஜனேற்றம் அடையும் தன்மை உடையது. இதன்படி மழை பெய்யத போது மண்ணில் உள்ள ஹெமடைட் சிவப்பு நிறமாக மாறி கடலில் கலந்து ரத்த கடல் போல் காட்சியளித்துள்ளது.
இங்கு ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், இவ்வாறாக கடல் ரத்த நிறத்தில் காட்சியளிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |