மீண்டும் இஸ்ரேலை தாக்கும் முனைப்பில் ஈரான்... உளவுத்துறை, அதிகாரிகள் உறுதி
இஸ்ரேலுக்கு பதிலடி உறுதி என வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தாக்குதல் முடிவில் ஈரான் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிரட்டல் விடுத்துள்ள அதே நாளில்
அரசாங்க அதிகாரிகள் தரப்பும் உளவு அமைப்புகளின் நிர்வாகிகளும் இதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் உச்சத்தலைவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடும் மிரட்டல் விடுத்துள்ள அதே நாளில், இந்த முடிவும் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஈரானுக்குள் கடும் வான் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. அக்டோபர் 1ம் திகதி தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இதை நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்றதொரு தாக்குதலை அமெரிக்காவும் முன்னெடுத்திருந்தது.
ஆனால் அமெரிக்கா மற்றும் பைடன் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தை அடுத்து ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதலை மட்டுப்படுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
இது ஈரான் மீண்டும் பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பை குறைக்க உதவும் என்று அமெரிக்கா நம்பியது. இருப்பினும், தற்போதைய சூழல் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை மற்றும் பகிரங்க ஈரானிய அறிக்கைகள் ஈரான் தாக்குதல்களை நடத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றன.
உறுதி என்றே இஸ்ரேலும் தகவல்
ஆனால் ஈரானிய மண்ணில் இருந்து இஸ்ரேல் மீதான மூன்றாவது நேரடித் தாக்குதலுக்கு எப்போது பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் முடிவு செய்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சமீபத்திய வாரங்களில் ஈராக்கில் இருந்து ஈரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், ஈராக்கில் இருந்து அல்லது ஈரான் ஆதரவு குழுக்களிடம் இருந்து தாக்குதல் உறுதி என்றே இஸ்ரேலும் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஈரான் தனது முடிவில் உறுதியாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |