ஈரானால் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலா... இஸ்ரேல் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த பிரித்தானியா
ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கத் திட்டமிடுகிறது என்ற கூற்றுகளை ஆதரிக்கும் எந்த மதிப்பீடும் இல்லை என்று பிரித்தானிய அமைச்சர் ஸ்டீவ் ரீட் தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்துவதற்கு
அப்படியான ஒரு நிலையில், ஈரான் இல்லை என்றும் ஸ்டீவ் ரீட் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சமூக ஊடகங்களில், லண்டன், பாரிஸ் அல்லது பெர்லினைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன என்று பதிவிட்டன.

மட்டுமின்றி, ஈரானின் ஏவுகணை வரம்பில் ஐரோப்பிய நாடுகள் இருப்பது உண்மையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே ஒரு நாடான இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
இந்த நிலையிலேயே, இஸ்ரேலின் கூற்றை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு மதிப்பீடும் இல்லை என்று பிரித்தானியாவின் வீட்டுவசதித் துறைச் செயலாளர் ரீட், பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர்கள் ஐரோப்பாவை இலக்காகக் கொள்ள முயல்கிறார்கள் என்று காட்டுவதற்கு எந்தவொரு மதிப்பீடும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை அவர்கள் முயன்றாலும்கூட, அவர்களால் அதைச் செய்ய முடியும் என்பதற்குச் சான்றாக ஏதும் இல்லை என்பது சொல்லவே தேவையில்லை என அமைச்சர் ரீட் குறிப்பிட்டுள்ளார்.
தலையிட விரும்பவில்லை
இதனிடையே, ஸ்கை செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டியிருப்பது, அவரின் சொந்தக் கருத்து என்றும், அதில் பிரித்தானியாவிற்கு பங்கில்லை என்றும் ரீட் கூறியுள்ளார்.

ட்ரம்பின் 48 மணி நேர கெடுவிற்கு பிரித்தானியாவின் நிலை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமெரிக்க ஜனாதிபதி, தமது கருத்தைப் பேசவும், தான் கூறுவதை நியாயப்படுத்திப் பேசவும் முழுத் திறமை வாய்ந்தவர் என்றார்.
மேலும், ஈரான் மீதான போரில் பிரித்தானியா தலையிட விரும்பவில்லை, ஆனால் அப்பகுதியில் எங்கள் சொந்த நலன்களை நாங்கள் பாதுகாப்போம். நிலைமையின் தீவிரத்தைக் குறைக்க நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும் ஸ்டீவ் ரீட் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |