Code 100 எச்சரிக்கை - உட்சபட்ச இராணுவ தயார்நிலையில் ஈரான்
Iran issues Code 100 military alert: ஈரான் Code 100 எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
Code 100
மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது ஆயுதப்படைகளுக்கு ‘Code 100’ என்ற மிக உயர்ந்த பாதுகாப்பு எச்சரிக்கையை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, நாட்டின் அதிகபட்ச ராணுவ தயார்நிலை என கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், Camp David-இல் இருந்து திடீரென திரும்பியதற்கும், இந்த எச்சரிக்கைக்கும் தொடர்பு இருக்கலாம் என Axios பத்திரிகையாளர் பராக் ரவீட் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த ‘Code 100’ அறிவிப்பு குறித்து ஈரான் அரசாங்கம் அல்லது அதிகாரப்பூர்வ ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை.
இந்த எச்சரிக்கை நடைமுறைக்கு வந்தால், இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்டு (IRGC), சாதாரண இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் அனைத்தும் உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வரப்படும். இது, ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையே ஏற்படக்கூடிய மோதலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்த தகவல்கள், மேற்கு ஆசியாவில் புதிய பதற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா ஏற்கனவே ஈரானின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் கடுமையான பதில் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |