Microsoft, SpaceX உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து... ஈரான் விடுத்த Thanksgiving மிரட்டல்
Iran issues chilling Thanksgiving warning targeting biggest tech giants: மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைத்து, Thanksgiving தினத்திற்கான எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.
அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் எலான் மஸ்க்கின் SpaceX போன்ற நிறுவனங்களின் தலைமையகங்களை பயங்கரவாதிகள் வெடிவைத்துத் தகர்ப்பதைக் காட்டும், கவலையளிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது.
சும்மா விடமாட்டோம்
ஈரான் அரசு ஊடகமான 'மெஹர் நியூஸ்' (Mehr News), அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான காணொளி ஒன்றை வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

அதில், எங்கள் குழந்தைகளின் கொலையாளிகளை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று ஒருவர் கூறுகிறார்; அதே வேளையில், அந்தத் தீவிரவாதக் குழு தனது தாக்குதலைத் தொடங்குகிறது.
ஆனால், நாங்கள் அமெரிக்க மக்களுக்குத் தீங்கு விளைவிக்க மாட்டோம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகம் தீக்கிரையாக்கப்படுவதும், ட்ரோன்களால் தாக்கப்படுவதும் காணொளியில் காணப்படுகின்றன. இஸ்ரேல் காஸா மீது தொடுத்த தாக்குதல்களுக்கு பின்னால் பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டுள்ளது சமீபத்தில் அம்பலமானது.
இந்த நிலையில், குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், பிப்ரவரி மாதம் ஈரானில் தொடங்கிய ராணுவ மோதலுக்குக் காரணமானவை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலில் பங்கேற்ற நிறுவனங்கள், இழப்பீடு வழங்கித் தங்கள் தவறை உணர்ந்து வருந்த வேண்டும்; இல்லையெனில், அதே அளவிலான அழிவைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக் காணொளியில் கூறப்படுகிறது; அப்போது திரையில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.
டெலிகிராம் சமூக ஊடகத்தில் உள்ள 'மெஹ்ர் நியூஸ்' (Mehr News) பதிவில், ஈரானில் குண்டுவீச்சுக்குள்ளான தொடக்கப்பள்ளி ஒன்று குறித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தும் பாரசீக மொழிச் செய்தி இடம்பெற்றுள்ளது.
ரகசிய ஒத்துழைப்பு
ஈரானிய மக்கள் மற்றும் மினாபின் அப்பாவி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உடந்தையாக இருக்கும் நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மினாப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில்தான், 175 பேர் கொத்தாக கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பாடசாலைக் குழந்தைகள், அந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்று ஆரம்பகட்ட ராணுவ விசாரணை கண்டறிந்தது.
அமேசான் முதல் மைக்ரோசாப்ட் வரை, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகளுடன் ரகசிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ள நிறுவனங்கள் பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தங்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படாத ஈரான் மீது ட்ரம்ப் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் ஹார்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் இருந்த ஏவுகணை ஏவுதளம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், ட்ரம்ப் ஈரானுடனான தனது பதிலடி மோதலைத் தீவிரப்படுத்தினார்.
கடந்த வாரம், ஈரான் இப்பகுதியிலுள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவிப் பதிலடி கொடுத்தது; அவற்றை அமெரிக்காவை ஆதரிக்கும் வளைகுடா நாடுகள் இடைமறித்துத் தடுத்தன.
இந்த மோதல் முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயம் உள்ள நிலையில், போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்கு இருந்த பொறுமை குறைந்து வருவதாக, ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், போரைத் தொடங்கியவர்கள் நிபந்தனை விதிக்க முடியாது என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.