மறைந்த ஈரான உச்ச தலைவருக்கு இறுதிச் சடங்கு: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
மறைந்த ஈரானின் உச்சத் தலைவர் இறுதிச் சடங்கின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறைந்த உச்ச தலைவரின் இறுதிச் சடங்கு
அமெரிக்காவுடனான மோதலின் ஆரம்பத்தில் ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
எதிரி படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு பல மாதங்களாக தள்ளிப் போய் வருகிறது.
இந்நிலையில் ஜூலை 4ம் திகதி தெஹ்ரானில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி யின் இறுதிச் சடங்கு அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

கோம் மற்றும் ஈராக் வழியாக சென்று மறைந்த தலைவரின் சொந்த ஊரான மஷ்ஹாதில் ஜூலை 9ம் திகதி அடக்கம் செய்யப்படுவதுடன் இறுதிச் சடங்கு நிறைவடைகிறது.
இந்த நிகழ்வுகளை முன்னிட்டு ஈரான் நாடு முழுவதும் பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லாவின் இறுசிச் சடங்கை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் ஈரானின் எதிரிகள் இந்த நேரத்தில் தவறான கணக்கீட்டில் ஈடுபட வேண்டாம், நாட்டிற்கு ஏதேனும் அச்சுறுத்தல்களோ, ஆக்கிரமிப்போ நடத்தப்பட்டால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
புதன்கிழமை ஈரன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அப்பாஸ் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றதில் இருந்து அமெஇக்கா படைகளீன் முக்கிய குறியாக உள்ளார் என்பது குறீப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |