ஏவுகணை தாக்குதலை தொடங்கிய ஈரான்... மத்திய கிழக்கில் இறுகும் மோதல்
அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது போலவே, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது ஈரான்.
இன்னொரு திசையில் இருந்து
உள்ளூர் நேரப்படி சுமார் 7.30 மணியளவில் இஸ்ரேலின் ஜெருசலேம் மீது டசின் கணக்கான ஏவுகணைகள் பாய்ந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் முக்கிய கடற்கரை நகரங்களை நோக்கி ஈரான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. சில ஏவுகணைகள் இஸ்ரேல் ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஏவுகணைகள் கடற்கரை நகரங்கள் மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து சென்றது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
Live video footage from Tel Aviv showed a barrage of projectiles that the Israeli military says were Iranian missiles after warnings of an imminent attack. pic.twitter.com/7HGTvZvQtD
— Al Jazeera English (@AJEnglish) October 1, 2024
சுமார் 10 நிமிட இடைவேளைக்கு பின்னர், இன்னொரு திசையில் இருந்து ஈரான் இரண்டாவது கட்ட ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு கட்டாயம் பழி தீர்க்கப்படும் என ஈரான் ஏற்கனவே சபதம் செய்திருந்தது.
மேலும், ஹிஸ்புல்லா மீதான தாக்குதல், ஈரானுக்கு வருகை தந்திருந்த ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரமும் ஈரானை கொந்தளிக்க செய்திருந்தது. இந்த நிலையிலேயே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
அத்துடன், இஸ்ரேலை பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலானது ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
கடுமையான விளைவுகளை
கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் மீது ட்ரோன்கள், க்ரூயிஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. வெளியான தகவலில், 170 ட்ரோன்கள், 30 க்ரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகளை மொத்தமாக இஸ்ரேல் மீது ஏவியது.
ஆனால் பெரும்பாலானவற்றை இஸ்ரேலும், அதன் நடபு நாடுகளும் முறியடித்தனர். இதனிடையே, தற்போது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர்,
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இஸ்ரேலுக்கு என திட்டங்கள் உண்டு, அதை நிறைவேற்றும் துணிவும் உண்டு என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலானது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான போராக வெடிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |