ட்ரம்பின் மிரட்டலுக்கு எதிராக நிற்போம்! ஈரானின் உச்ச தலைவர் தடாலடி
ஈரானால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படாத புதிய கோரிக்கைகளை அமெரிக்கா எழுப்புவதாக உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்த டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் பேசும்போது, "ஈரானுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால், நாங்கள் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்" என எச்சரித்தார்.
இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி ஜனாதிபதி ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "சில மிரட்டல் அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையை வலியுறுத்துவது பிரச்சனையை தீர்ப்பதற்காக அல்ல. அவர்களின் புதிய கோரிக்கைகளை முன் வைப்பதற்கான ஒரு பாதையாகும். ஈரானால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படாத புதிய கோரிக்கைகளை அவர்கள் எழுப்புகிறார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈரான் நிச்சயமாக ஏற்காது. பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிரட்ட முடியாது. வற்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு எதிராக நிற்போம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |