உயரமான பாலத்தை தாக்கிய அமெரிக்கா - 8 பாலங்களை குறிவைக்கும் ஈரான்
ஈரானின் உயரமான பாலத்தை அமெரிக்கா தாக்கிய நிலையில், வளைகுடாவில் உள்ள 8 பாலங்களை ஈரான் இலக்கு வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரானின் உயரமான பாலத்தை தாக்கிய அமெரிக்கா
ஈரான் தலைநகர் தெஹ்ரானை, மேற்கு நகரமான கராஜ் உடன் இணைக்கும் பாலத்தை ஈரான் கட்டி வருகிறது.
1050 மீட்டர் நீளம், 136 மீட்டர் உயரம் உள்ள இந்த பாலம் மத்திய கிழக்கில் உள்ள உயரமான பாலமாக கருதப்பட்டது.

கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருந்த இந்த பாலத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி பாலத்தை சேதப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாலம் தாக்குதலுக்குள்ளான வீடியோவை வெளியிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் மிகப்பெரிய பாலம் மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாதபடி இடிந்து விழுகிறது.
ஒரு மாபெரும் நாடாக உருவெடுப்பதற்கு இனி எதுவும் மிச்சமில்லாத நிலை வருவதற்கு முன்பாக, காலம் தாமதிக்காமல் ஈரான் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டிய நேரம் இது" என தெரிவித்துள்ளார்.
8 பாலங்களுக்கு குறி வைத்துள்ள ஈரான்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "முடிக்கப்படாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது.
Striking civilian structures, including unfinished bridges, will not compel Iranians to surrender.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 2, 2026
It only conveys the defeat and moral collapse of an enemy in disarray. Every bridge and building will be built back stronger. What will never recover: damage to America's standing. pic.twitter.com/872zuE36qD
அது, சீர்குலைந்த ஒரு எதிரியின் தோல்வியையும் தார்மீக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது." என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ்வில் உள்ள ரயில் நிலையம் உள்ளிட்ட 9 பகுதிகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை குறிவைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் பட்டியலில், குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் சயத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம், சவுதி அரேபியாவை பஹ்ரைனுடன் இணைக்கும் கிங் ஃபஹத் இணைப்புப் பாலம், ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகிய 8 பாலங்கள் இடம்பெற்றுள்ளன.
IRAN JUST RELEASED A TARGET LIST OF 8 BRIDGES ACROSS 4 COUNTRIES. THIS CHANGES EVERYTHING.
— प्रियदर्शी (@q94YaHZZfZcuzMA) April 3, 2026
🇰🇼 Sheikh Jaber Al Ahmad Al Sabah Bridge — TARGETED.
36 km over water. Kuwait's northern lifeline. No alternative route.
🇸🇦 King Fahd Causeway — TARGETED.
ONLY road between Saudi Arabia… pic.twitter.com/zlfPhnf4LU
இதில், அபுதாபியை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் 3 பாலங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன.

இதே போல், பஹ்ரைனை சவுதி அரேபியாவை இணைக்கும் ஒரே பாலமான கிங் ஃபஹத் இணைப்புப் பாலம் தாக்கப்பட்டால், பஹ்ரைனின் வெளியுலக தரைவழி தொடர்பு துண்டிக்கப்படும். அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படையின் தளவாடங்கள் இதையே சார்ந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |