ஈரான் யுரேனியம் செறிவூட்டும் திறனை இழந்துவிட்டது: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் போர்
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆபரேஷன் ரோரிங் லயன்(Operation Roaring Lion) போர் தாக்குதல் 20 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போர் சூழல் தற்போது முழுமையாக இஸ்ரேலுக்கு சாதகமாக திரும்பியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டு இருப்பதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி கனவு
அத்துடன் ஈரான் தற்போது அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் திறனை முற்றிலுமாக இழந்துவிட்டதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அதைப்போல பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனை ஈரான் தற்போது கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது, அதே நேரத்தில் இஸ்ரேல் பிராந்திய சக்தியாக மட்டுமின்றி உலக சக்தியாகவும் உருவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |