ஈரானின் மஹல்லாட் நகர் மீது தாக்குதல்: 11 பேர் வரை உயிரிழப்பு
ஈரானின் முக்கிய நகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பேர் உயிரிழப்பு
தஸ்னிம் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் ஈரானின் மஹல்லாட் நகரின் மீது நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மார்கசி மாகாணத்தின் பாதுகாப்பு துணைச் செயலாளர் அளித்த தகவலின் படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 குடியிருப்பு கட்டிடங்கள் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளன. அதில் 4 குடியிருப்புகள் முற்றிலுமாக தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாடுகளிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கங்களும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |