சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு
ஈரானில் உள்ள மிகப்பெரிய உலோகச் சுரங்கங்களில் ஒன்றில் ஒரு பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
53.1 மில்லியன் டன்
கிழக்கு மாகாணமான தெற்கு கோரசானில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஷாடன் தங்கச் சுரங்கத்திலேயே புதிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், புதிய இருப்புக்கள் தொழில், சுரங்கங்கள் மற்றும் வர்த்தக அமைச்சகத்தால் உத்தியோகப்பூர்வமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்த சுரங்கத்தில் சுமார் 7.95 மில்லியன் டன் ஆக்சைடு தங்கத் தாதுவும், 53.1 மில்லியன் டன் சல்பைட் தங்கத் தாதுவும் உள்ளன. இதில் ஆக்சைடு தங்கத் தாதுவானது பொதுவாக வெட்டி எடுப்பதற்கு மிகவும் எளிதானது மற்றும் செலவு குறைவானது என்றே கூறப்படுகிறது.
ஈரான் தனது தேசிய தங்க இருப்புக்களின் அளவை உத்தியோகப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அதன் கொள்முதலை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
செப்டம்பரில், ஈரானின் மத்திய வங்கி ஆளுநர் முகமதுரேசா ஃபார்சின் தெரிவிக்கையில், 2023-2024 ஆம் ஆண்டில் உலகின் முதல் ஐந்து தங்கம் வாங்கும் மத்திய வங்கிகளில் ஒன்றாக ஈரானின் வங்கி இருப்பதாகக் கூறினார்.

சர்வதேச தடைகளின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தங்க இருப்புக்களை அதிகரிப்பது உதவும் என்று மத்திய வங்கி அதிகாரி யெக்தா அஷ்ரஃபி கூறியதாக உள்ளூர் ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.
சர்ஷோரன் சுரங்கம்
ஈரானில் 15 தங்கச் சுரங்கங்கள் உள்ளன, அவற்றில் மிகப்பெரியது நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள சர்ஷோரன் சுரங்கமாகும். அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் டொலருக்கு எதிரான ரியாலின் நாள்பட்ட சரிவு காரணமாக வாங்கும் திறன் தொடர்ந்து குறைந்து வரும் பல ஈரானியர்களுக்கு தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் உள்ளது.

திங்களன்று, முறைசாரா சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு சுமார் 1.17 மில்லியன் ரியால்கள் என வர்த்தகம் செய்யப்பட்டது. யூரோவின் மதிப்பு சுமார் 1.36 மில்லியன் ரியாலாக இருந்தது.
இதனிடையே, மிக சமீபத்தில் தான், எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் 11 மில்லியன் டன் தங்கம் மற்றும் வெள்ளி வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |