ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான்
அமெரிக்காவின் போர் அச்சுறுத்தல்களுக்கு நடுவே, ஆயிரக்கணக்கான மேம்பட்ட தோள்பட்டை ஏவுகணைகளை வாங்குவதற்காக ஈரான் ரஷ்யாவுடன் 500 மில்லியன் யூரோ ரகசிய ஆயுத ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
கசிந்த ஆவணங்கள்
கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யாவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த மூன்றாண்டுகளில் 500 Verba ஏவுகணைகளும், 2,500 9M336 ஏவுகணைகளும் ரஷ்யா ஈரானுக்கு வழங்கும்.

ஈரான் மீது அமெரிக்கா போர் அச்சுறுத்தல் அளித்துவரும் நிலையில், ரஷ்ய - ஈரான் ரகசிய ஒப்பந்தத்தின் ஆவணங்கள் கசிந்துள்ளது. மட்டுமின்றி இந்த ஆவணங்களை இராணுவ நிபுணர்கள் தரப்பும் உறுதி செய்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2027 முதல் 2029 வரை மூன்று தவணைகளாக ஆயுத விநியோகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான Rosoboronexport மற்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ரஷ்ய பிரதிநிதி,
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?
இவர்களுடன் MODAFL நிறுவனமும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆயுதங்கலின் ஒரு தொகுப்பை கடந்த ஜூலை மாதம் ஏற்றுமதி செய்ய ஈரான் கோரியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவும் இணைந்ததுடன், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களைத் தாக்கின.

கூட்டு ஒப்பந்தம்
இதனையடுத்து, இந்தத் தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும், அந்த நேரத்தில் அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்றும், சில மாதங்களுக்குள் ஈரானால் அதை மீண்டும் அமைக்க முடியும் எனவும் பதிவு செய்தது.
போரின் போது ஏற்பட்ட சேதத்திலிருந்து தெஹ்ரான் மீண்டுவிட்டதாகவும், அதன் திறன்கள் முன்னெப்போதையும் விட சிறப்பாக இருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர்.

ரஷ்யா ஈரானுடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது, இருப்பினும் இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இதுவரை ஈடுபட்டதில்லை.
இதனிடையே, பிப்ரவரி மாத தொடக்கத்தில், இந்த வாரம் ஓமன் வளைகுடாவில் ஈரானிய கடற்படையுடன் ஒரு ரஷ்ய கடற்படை கொர்வெட் நடவடிக்கைகளை நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |