Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான் - Anthropic கண்டுபிடிப்பு
Iran misused Claude AI to target US naval bases: Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
Anthropic வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்க கடற்படை வீரர்களின் பெயர்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் அடையாள எண்கள், செயற்கைக்கோள் படங்கள், மற்றும் பொதுவாக வெளிப்படும் இணையதளங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், Claude-ஐ பயன்படுத்தி கப்பல் தொடர்பு அமைப்புகள், Cisco சாதனங்கள், VSAT terminals போன்றவற்றின் பலவீனங்களை ஆராய்ந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
ஈரான் சமீபத்தில் USS Delbert D Black, USS John Paul Jones போன்ற அமெரிக்க போர் கப்பல்களை ஏவுகணைகளால் தாக்கியிருந்தது. அதேபோல், பஹ்ரைனில் உள்ள US Navy Fifth Fleet தலைமையகம் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை
Anthropic-ன் அறிக்கையில், Claude AI மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் நேரடியாக தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை எனவும், ஆனால் AI-ஐ தவறாக பயன்படுத்தும் அபாயம் மிகுந்தது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஈரான் கலாச்சார மற்றும் தொடர்பு அமைப்புடன் தொடர்புடைய கணக்குகள், ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல திட்டங்கள் மற்றும் வாரிசு தொடர்பான ஆவணங்களை Claude-இல் பதிவேற்றியதாகவும் Anthropic கண்டறிந்துள்ளது.
இந்த தகவல்கள், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு உலகளாவிய பாதுகாப்பிற்கு பெரிய சவாலாக மாறி வருவதை வெளிப்படுத்துகின்றான்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |