குப்பைத் தொட்டியிலும்... ட்ரம்ப் விமானத்தை மாற்றியதை கேலி செய்த ஈரான்
Iran Mocks Trump's Plane Switch: துருக்கி பயணத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொண்டதை ஈரானின் அரசு ஊடகம் கேலி செய்துள்ளது.
இஸ்லாமியக் குடியரசின் வலிமையைக் கண்டு அவர் எவ்வளவு பதற்றமடைந்துள்ளார் என்பதை இது காட்டுவதாகவும் கூறியுள்ளது.
ராணுவ வலிமை
மீண்டும் ஒரு புதிய சர்ச்சையின் மூலம், தற்போதைய அமெரிக்க ஊடகங்களில் ட்ரம்ப் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளார். ஈரான் நாட்டின் ராணுவ வலிமை குறித்த அச்சத்திலிருந்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது; அந்த வலிமைதான்,

கடந்த மாதம் துருக்கியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது என ஈரானிய செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணையால் குறிவைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ரகசிய சேவைப் பிரிவு ட்ரம்ப்பை இரகசியமாக ஒரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றியது என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கை காரணமாக பதற்றம் நிலவி வரும் சூழலில், நேட்டோ உச்சிமாநாட்டிற்காக அங்காராவுக்கு டிரம்ப் மேற்கொண்டிருந்த பயணத்தின் இறுதி நாளன்று இந்த அச்சுறுத்தல் உருவானதாக தகவல் கசிந்தது.
அதிகாரிகள் அதிர்ச்சி
மேலும், அங்காராவில் ட்ரம்ப் தங்கியிருந்த ஹொட்டலின் சரியான தளம் உட்பட, அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது ஈரானியர்களுக்குத் தெரிந்திருந்தது கண்டு அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகையும் விளக்கமளிக்கவில்லை.
அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக அப்போது இருந்த ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புரட்சிகரப் படை உத்தரவிட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பாக, 2024-ல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது.
ஆனால், செப்டம்பர் 2024-ல் ஈரான் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்த நிலையிலேயே அச்சுறுத்தல் என்றால், குப்பைத் தொட்டியிலும் ட்ரம்ப் ஒளிந்துக் கொள்வார் என ஈரான் கேலி செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |