கோமாவில் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி: புனித நகரில் ரகசிய சிகிச்சை
ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமேனி கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோமா நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவர்
ஈரானிய உச்ச தலைவர் அயத்துல்லா காமெனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் தீவிரமான போர் மோதல்கள் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க முன்னெடுத்த தாக்குதலில் அயத்துல்லா காமெனி கொல்லப்பட்ட அதே நேரத்தில் அமெரிக்காவின் தாக்குதலில் அவரது மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமேனி பாதிக்கப்பட்டு தற்போது கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து 87 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனித நகரான கோமில் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் போர் நடவடிக்கைகளின் முடிவுகளை மொஜ்தபா காமேனி எடுப்பது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுக்கும் சந்தேகம்
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இதுவரை பொதுவெளியில் அவர் காணப்படவில்லை என்பதே இந்த சந்தேகங்களை மேலும் வலுக்க செய்கிறது.
போர் மற்றும் உள்நாட்டு நிர்வாகம் தொடர்பாக மொஜ்தபா காமேனி பெயரில் பல அறிக்கைகள் வெளியானாலும், அவரது குரல் பதிவுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
மொஜ்தபா காமேனி உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களும் வெளிவரவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |