தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை
ஈரானின் உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனி தனது முதல் உரையில் தேசத்தின் ஒற்றுமைக்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
ஈரானின் புதிய உச்சத் தலைவரின் முதல் உரை
அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டத்தை அடுத்து அவரது மகன் மோஜ்தபா கமேனி ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மோஜ்தபா கமேனி முதல் முறையாக வழங்கிய உரையில், தேசத்தின் ஒற்றுமைக்காக உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார்.
மேலும் அந்த அறிக்கையில் தன்னுடைய குடும்பம் சந்தித்துள்ள இழப்புகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார்.

குறிப்பாக அதில், குடும்ப உறவுகளை இழந்து வாடும் ஒவ்வொரு ஈரான் குடிமகனுடனும் வலியை பகிர்ந்து கொள்வதாக மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். ஏனெனில், நான் என்னுடைய தந்தையை இழந்து விட்டேன், மனைவியை இழந்து விட்டேன், போரில் தனது சகோதரி அவரது கணவரையும்,குழந்தைகளையும் இழந்து வாடுவதாக தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான துயரங்களுக்கு மத்தியில் மன உறுதியும் ஆன்மீக பலமுமே முன்னோக்கி செல்வதற்காக ஒரே வழி என்று கமேனி சுட்டிக்காட்டியுள்ளது.
மோஜ்தபா கமேனியின் உரையில் பெரும்பாலான பகுதி அமைதி மற்றும் நாட்டு மக்களின் ஒற்றுமையை மையப்படுத்தி இருந்தாலும், ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கும் பழி தீர்க்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கையுடன் அது நிறைவு பெற்றுள்ளது.
அதில், இது எங்கள் தியாகிகளுக்கு நீதி தேடும் கடமையில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம் என்று மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.
மேலும் இது உச்ச தலைவர் இழப்பு பற்றியது மட்டுமல்ல, போரில் வீழ்ந்த ஒவ்வொரு ஈரான் மக்களை பற்றியதாகும் என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL ல் இணையுங்கள். |