ட்ரம்ப் விடுத்துள்ள கடும் மிரட்டல்... வாய்ப்பில்லை என மொத்தமாக நிராகரித்த ஈரான்
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் கடும் விளைவுகளை ஈரான் எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஈரான் அதிரடியாக முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடிவெடுக்கவில்லை
ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து கட்டுபப்டுத்தி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், ஈரானிடம் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளும் நிலை ஏற்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதனிடையே, பாகிஸ்தானில் நாளை இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது. அமெரிக்கா சார்பாக குழு ஒன்று புறப்பட்டுள்ள நிலையில், ஈரான் இந்த விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை இருக்கும் வரை, பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்புவது குறித்து ஈரான் தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் ஏற்கத்தக்க ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்கிறோம், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

விவாதிக்கப்படாமல்
ஏனெனில், அவர்கள் அதை ஏற்காவிட்டால், அமெரிக்கா ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் தகர்த்துவிடும்.
இனி அமெரிக்காவின் உண்மையான முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவர்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். கடந்த 47 வருடங்களாக, அமெரிக்காவின் பல ஜனாதிபதிகள் முன்னெடுக்காத நடவடிக்கையை இந்த முறை அமெரிக்கா முன்னெடுக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பல இடைவெளிகள் உள்ளன, மேலும் சில அடிப்படைக் கருத்துகளும் விவாதிக்கப்படாமல் அப்படியே உள்ளன என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |