ரஷ்யாவால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்க ஈரானை நாடும் ஐரோப்பிய நாடுகள்
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளால் அதிகரித்து வரும் எண்ணெய் விலையை சமாளிக்க, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் உதவும் என அயர்லாந்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால், ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து அயர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் Simon Coveney கூறியதாவது, புதிய ஒப்பந்தம் மூலம் ஈரான் மீண்டும் விநியோக சந்தைக்கு திரும்ப அனுமதி அளிக்கும்.
ரஷ்யாவுக்கு மாற்று நமக்கு தேவைப்படும் நிலையில், ஈரான் உடனான புதிய ஒப்பந்தம் விரைவில் இறுதியாக இருப்பது ஒரு நல்ல செய்தி என Simon Coveney கூறினார்.
2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்காக ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிகப்பட்டன.
இந்நிலையில், ஈரான் அதன் அணு ஆயுதத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிடுவதற்கு ஈடாக, புதிய ஒப்பந்தம் மூலம் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படயிருக்கிறது.