எண்ணெய்க் கப்பல்களுக்கு மாற்றுப் பாதை: ஈரான் அறிவிப்பு
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை அனுமதித்துள்ள நிலையில், வழக்கமான பாதைக்கு பதிலாக, கப்பல்களுக்கு மாற்றுப் பாதை ஒன்றை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய்க் கப்பல்களுக்கு மாற்றுப் பாதை
ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் அனுமதியளித்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையில், போர் நிறுத்தம் அமுலில் இருக்கும்போதே இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நிகழ்த்தியதால் மீண்டும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில், வழக்கமான பாதைக்கு பதிலாக, கப்பல்களுக்கு மாற்றுப் பாதை ஒன்றை பரிந்துரைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கப்பல்கள் பயணிக்கும் வழக்கமான பாதையில் கண்ணிவெடிகள் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு கருதி மாற்றுப் பாதை ஒன்று குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ஈரான் புரட்சிப் படையினர், கப்பல்கள் முன்பு பயணிக்க பயன்படுத்திவந்த பாதை வழியாக செல்லாமல், தற்போது தாங்கள் கூறும் பாதை வழியாக பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |