உக்ரைனை தாக்க 3 இடங்களை குறி வைத்தோம்: ஆனால்., ஈரான் அதிகாரி தகவல்
உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டதாக ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரானிய கப்பல் மீது தாக்குதல்
சமீபத்தில் ஈரானிய வர்த்தக கப்பல்களை குறிவைத்து உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்ததுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உக்ரைன் மூலம் ஐரோப்பிய நாடுகளையும் தங்களுக்கு எதிரான போரில் திருப்பிவிட முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில்(IRIB) அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், உக்ரைன் உள்ள 3 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், பின்னர் உக்ரைன் தரப்பு மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த தாக்குதலானது கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் விவகாரம்

மேலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்து பேசிய மொஹ்சென் ரெசாய், ஈரானால் தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர வேறு எந்த புதிய பாதையும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நெறிமுறைகளை அமெரிக்கா மீறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |