ஈரானில் அமில மழை பெய்யும் ஆபத்து - என்ன பாதிப்பு ஏற்படும்?
ஈரானின் எண்ணெய் கிடங்கு மீதான தாக்குதல் காரணமாக அமில மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனை சுற்றியுள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் வான்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் பாரிய அளவில் பற்றிய தீயை ஈரான் தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

மேலும், வானம் முழுவதும் கரும் புகை பரவியதால் சூரிய ஒளி கூட இல்லாமல் நகரே இருளில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
This is Ghaem Maqam Farahani Street in Tehran, Iran today.
— Weather Monitor (@WeatherMonitors) March 8, 2026
Oil fell with the rain, not normal rain that helps people, crops, trees, animals, and nature. This is an ecological disaster. pic.twitter.com/nmKETu59as
அமில மழை
இதனை தொடர்ந்து, வானில் இருந்து கருப்பு மழை பொழிந்ததாக தெஹ்ரான் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த மழை காரணமாக சாலைகள், கார்கள், கட்டிடங்களில் கருப்பு எச்சங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
NOW: 🇮🇷 U.S-Israeli strike on Iran oil depot covers the sky in black smoke and dark clouds, making the day look like night.
— Radar 𝘸 Archie🚨 (@RadarHits) March 8, 2026
Iran’s Shahran oil depot is still on fire. pic.twitter.com/r49VbBwdpe
மேலும், பலருக்கு இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டதாகவும்தெரிவித்துள்ளனர்.
நச்சு ரசாயனங்கள் காற்றில் பரவியதால், ஈரானில் அமில மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஈரானிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் மழை பெய்தவுடன் ஏர் கண்டிஷனர்களை இயக்குவதை தவிர்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அத்தியாவசிய தேவை காரணமாக வெளியே செல்லும் பொது முகக்கவசம் அணிய நகர ஆளுநர் அறிவுத்தியுள்ளார்.
நச்சு வாயுக்கள் மற்றும் நுண்ணிய துகள்கள் கண்கள் மற்றும் காற்றுப்பாதைகளை எரிச்சலடையச் செய்யலாம், ஆஸ்துமா, நுரையீரல் நிலைமைகள் மற்றும் இதய நோய்களை மோசமாக்கலாம் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காற்று மூலம், இந்த ரசாயனங்கள் படர்ந்துள்ள மேகங்கள் அண்டை நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் சிலர் கணிப்பு தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |