ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல் பாதை: ஈரான் - ஓமன் இடையே இறுதியான ஒப்பந்தம்
ஈரானும் ஓமனும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் பாதை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளனர்.
ஈரான் - ஓமன் இடையே ஒப்பந்தம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட புவியியல் ஆயத்தொலைவுகளை இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஈரானும் ஓமனும் இணைந்து வெற்றிகரமாக இறுதி செய்துள்ளனர்.
இந்த தகவலை ஈரானின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகேயி உறுதிப்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்புகள் இதில் தலையிட்டு எந்தவொரு இடையூறும் செய்யாத பட்சத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான கூட்டு அறிக்கை தொடர்பான இறுதிக்கட்ட மதிப்பீடு மற்றும் வரைவுப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் இஸ்மாயில் பகேயி குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி இருந்தாலும், இந்த ஒப்பந்தம் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியில் முறையான கடல்சார் பாதுகாப்பை உறுதி அளிக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் தான் இந்த நிலையற்ற தன்மைக்கு முக்கிய காரணம் என்று அமைச்சர் இஸ்மாயில் பகேயி சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |