ஈரானின் அடுத்த பேரிடி., உத்தரவுக்காக காத்திருக்கும் ஹவுதி!
உலகின் மற்றொரு முக்கியமான நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரானின் மின்சார வலையமைப்பை அமெரிக்கா தாக்கினால், யேமனின் ஹவுதி இயக்கம் செங்கடல் வாயிலான பாப் எல்-மண்டெப் நீரிணையை (Bab el-Mandeb strait) மூட தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வாயில் உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும். ஹவுதிகள் ஏற்கனவே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்தப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும், உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், செங்கடல் வாயிலும் மூடப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளின் இரண்டு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும். இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது.

சவுதி அரேபியா இந்த அச்சுறுத்தலை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு வருகிறது. ஏற்கனவே தனது எண்ணெய் ஏற்றுமதியின் 70 சதவீதம் செங்கடல் வழியாக யன்பு துறைமுகத்திற்கு மாற்றியுள்ளது.
அங்கு நேரடி தாக்குதல் நடந்தால், உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்படும்.
ஈரான், ஹவுதிகளை தனது Axis of Resistance கூட்டணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இதில் லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக்கின் ஷியா ஆயுதக் குழுக்களும் அடங்குகின்றன.
அமெரிக்கா, ஈரான் ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்குவதாக குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஈரான் அதை மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |